குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம்

63பார்த்தது
குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம்
பெரம்பலூர் அருகே அய்யலூர் கல்பாடி ரோட்டை சேர்ந்த வர் சுப்ரமணி. இவரது மகன் கலையரசன் (வயது 24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல் களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு ஜமாலியா நகரை சேர்ந்த உமர் பாரூக்கின் மகன் நியாஸ் அகமது (31) தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா, மது விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேற்கண்ட 2 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருந்தனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தால் மேற்கண்ட குற்றச்செயல்களை தொடர்ந்து செய்வார்கள். இதனால் அவர் களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரின் பரிந்துரையை ஏற்று கலையரசன், நியாஸ் அகமது ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருந்த அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையின் நகலை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி