விபத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பலி

4024பார்த்தது
விபத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பலி
திண்டுக்கல் மாவட்டம் முல்லைப்பாடி போஸ்ட் செட்டியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநரான இவரது மகன் அருண் மில்டன் வயது 22, இவர் செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் உதவி வேளாண்மை அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், சொந்த ஊர் சென்றவர், ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை மீண்டும் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில்- இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருந்ததால் சர்வீஸ் சாலையில் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளாகி - சம்பவ இடத்திலேயே அருண் மில்டன் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து பாடலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் உயிரிழந்த அருண் மில்டன் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து நடந்தது எப்படி? விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி