தீச்சட்டி ஏந்திய பக்தர்கள்: பரவசத்தில் மூழ்கிய கிராமம்

55பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில்
ஸ்ரீ சுந்தர விநாயகர் மற்றும்
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு 38 ஆம் ஆண்டு ஆடி மாதம் பால் குட திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 17ஆம் தேதி அன்று காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கை உடன் அம்மன் வீதி உலா அக்னி சட்டி முளைப்பாரிகை பால்குடம் அம்மன் கரகம் ஆகியவை ஏரிக்கரையில் இருந்த புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
சுந்தர விநாயகர் மற்றும் அம்மனுக்கு திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் இளநீர் பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. அருகிலுள்ள செங்குந்தபுரம், புதுக்குடி, கரைமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து பொதுமக்கள் பக்தர்களை பரசவத்தில் ஆழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி