மாற்றுத்திறனாளிகள் நல சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

72பார்த்தது
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் -துறையூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சிம்ம சந்திரன் தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சிம்மச்சந்திரன், தெரிவிக்கையில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சீனியர் சிட்டிசன்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைக்கு, அதிக வட்டி தரப்படுகிறது.

அதேபோல மாற்றுத்திறனாளிகளின் நிரந்தர வைப்பு தொகைக்கும் அதிக அளவில் வட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுங்கச்சாவடிகளில் காரில் செல்லும் போது எங்களுக்கு கட்டண சலுகை உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சலுகைகளை முழுமையாக பெற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோல சிக்கல்களால் மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிக்காக அறிவித்துள்ள சலுகைகளையும் திட்டங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு செய்து தராவிட்டால், தமிழகத்தில் தற்பொழுது 40 எம்பிக்கள் அங்கம் வகிக்கக்கூடிய நிலையில் அவர்கள் எங்களுக்காக போராடி சலுகைகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி