அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ ம முக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். கடந்த நாராளுமன்றத் தேர்தலில் வெற்றி சின்னமான இரட்டை இலை திமுகவின் வெற்றிக்கு பயன்படும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார் என குற்றம் சாட்டினார்.