இரத்த சோகை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பொதுவானது. இரும்புச்சத்து குறைபாடு பலருக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. உலர் திராட்சை இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்குகிறது. இதில் இரும்புச்சத்துடன் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. 10-15 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் தண்ணீருடன் சாப்பிடுவது நல்லது. இது இரும்புச்சத்து குறைபாட்டை குறைக்கிறது. இதன் விளைவாக இரத்த சோகை குறைகிறது. மேலும் அத்திப்பழம், பேரீட்சை, நெல்லிக்காய், மாதுளை, ஆட்டு ஈரல், ஒமேகா மீன், முட்டை, கீரை, காய்கறிகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.