மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி தொடர்புடைய வழக்கில், பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது.
கருப்பசாமி, முருகனுக்கு எதிராக சாட்சியம் அளித்த பல்கலைக்கழக ஊழியர்கள் பிறழ் சாட்சியாக மாறியதால் இருவரும்
விடுதலை ஆகியுள்ளனர். ஆனால் தண்டனை தரக்கூடிய அளவுக்கு போதுமான சாட்சிகள் இருப்பதாகவே அரசுத்தரப்பு கருதுகிறது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.