அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அன்பில் மகேஷ் நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ, என்னிடம் எல்லாம் இந்த பந்தா காட்டும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணர்ந்தவன் நான். கல்வி சாதாரண மக்களுடைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இப்படி போராடிக் கொண்டிருக்கின்றோம்" என்று பேட்டியளித்துள்ளார்.