குழந்தைக்கு பெயர் சூட்டிய உதயநிதியை விளாசிய அண்ணாமலை

51பார்த்தது
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒருவர் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு உதயநிதியிடம் கேட்டுள்ளார். அதற்கு உதயநிதி ‘ரோலக்ஸ்’ என்று பெயர் வைக்கிறார். இது வாட்ச் பெயர் என்று யாரும் நினைத்து விடாதீர்கள், கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் போதைப்பொருள் கடத்துபவன் பெயர் ரோலக்ஸ் தான். அந்தப் பெயரைப் போய் குழந்தைக்கு வைக்கிறார். திமுகவின் மன்னர் ஆட்சி ஜூன் 4ம் தேதியுடன் முடிவுக்கு வரும்” என அவர் கூறினார்.

நன்றி: Puthiyathalaimurai Tv

தொடர்புடைய செய்தி