அண்ணாமலை மனு.. செப்.9க்கு தள்ளிவைப்பு

83பார்த்தது
அண்ணாமலை மனு.. செப்.9க்கு தள்ளிவைப்பு
மத வெறுப்புணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர் மனுதாரர் பதில் மனு அளிக்கவும், அண்ணாமலை விளக்க மனு அளிக்கவும் 6 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி