தனுஷ் உடன் மீண்டும் இணையும் ஆனந்த் எல் ராய்!

367பார்த்தது
தனுஷ் உடன் மீண்டும் இணையும் ஆனந்த் எல் ராய்!
தனுஷ் மற்றும் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் 3வது படம் குறித்த அறிவிப்பு ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு தனுஷ் பாலிவுட்டில் 'ராஞ்சனா' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு வெளியான 'அட்ராங்கி ரே' படத்திலும் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் பாலிவுட்டில் தனுஷுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்த நிலையில், 'ராஞ்சனா' படம் வெளியாகி நாளையுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த கூட்டணியில் உருவாகும் 3வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி