ஆம்புலன்ஸ் ஃபுல்லா காசுதான் போகுது - சீமான்

58பார்த்தது
நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் பேசிய அவர், “ஆம்புலன்ஸ் முழுவதும் பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். என் தம்பிகள் சிலரை கூப்பிட்டு உனக்கு பணம் இல்லை என்றால் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்து என நான் அறிவுரை கூறினேன். பணத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்தும் இவர்களின் பிணத்தை அதே ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லும் நாள் விரைவில் வரும்” என பேசினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி