தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித தலையீடு இல்லாமல் இருந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இயங்கி முடிவுகள் துல்லியமாக இருக்கும், மனிதர்களின் தலையீடு தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்க முடியும் என தெரிவித்த நீதிமன்றம் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தால் வாக்குகளை எப்போது எண்ணி முடிக்க முடியும் என கேள்வியெழுப்பியதற்கு 12 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.