2024 ஆம் ஆண்டுக்கான வைப்ரன்ட் குஜராத் (Vibrant Gujarat) மாநாட்டில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ்
அம்பானி, அங்கு செயல்படுத்தவுள்ள 5 முக்கிய திட்டங்கள் குறித்து கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தொழில் துறையினர், முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் கோடியில் திருபாய்
அம்பானி க்ரீன் எனர்ஜி வளாகம். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொழில்நுட்பம். 3 ஆவதாக ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் மூலம் விவசாயிகள், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். 4வதாக ஹாசிராவில் ரிலையன்ஸ் உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் தொழிற்சாலை அமைக்கவுள்ளது. 5வதாக
இந்தியா 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த ரிலையன்ஸ் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.