பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி பேமண்ட் நிறுவனமான பேடிஎம்-ஐ ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ்
அம்பானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. பணம் அனுப்புதல், பெறுதல், ரீசார்ஜ் செய்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம்,
இந்தியா முழுவதும் 30 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.