கூட்டணி வரும், போகும். ஆனால், கொள்கை நிலையானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் நடந்த செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய இபிஎஸ், "மக்களவைத் தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகளை பெற்றோம். தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான். 2021ஆம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது" என்று தெரிவித்தார்.