கேரள கிரிக்கெட் சங்கம் தனது மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார். சஞ்சு சாம்சனுக்கும் கேரள கிரிக்கெட் சங்கத்திற்கும் நடந்து வரும் கருத்து வேறுபாடுகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன. விஜய் ஹசாரே டிராபி அணியில் இருந்து சாம்சன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அதே நேரம் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தங்களுக்கு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.