வயநாடு பெரும் நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேஜர் ஜெனரல் எம்.இந்திரபாலன் குழுவின் உதவி கோரப்பட்டுள்ளது. நிவாரண நிதி மூலம் கேரளா அரசின் வரவு செலவுகளுக்கான கணக்கு இல்லை என்ற வதந்தி பரப்பப்படுகிறது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வெளிப்படையானது என தெரிவித்துள்ளார்.