'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இளமையான தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். 'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் அஜித்குமாரின் போஷன் முடிவடைந்ததாகவும் கடைசி கட்ட படப்பிடிப்பு அவருடன் நடைபெற்றதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 'தனக்கு இந்த வாழ்நாள் வாய்ப்பை வழங்கிய அஜித் சாருக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.