இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் லடாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த இரு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பியதாக விமானப்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரையிறங்கும் போது கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் அதிக உயரம் காரணமாக ஹெலிகாப்டர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.