மானியம், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் முறைகேட்டை தடுக்க தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கூட்டுப்பட்டா வைத்திருக்கும் விவசாயிகளும் இந்த பதிவை செய்யலாம். பட்டா இல்லையென்றால் பதிவு செய்ய முடியாது. விவசாய நிலங்களை பதிவு செய்பவர்களுக்கு தனித்துவமான அடையாள எண்ணும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் விஏஓ ஆபிஸ், ஊராட்சி ஆபிஸ் ஆகியவற்றில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.