குட்டையில் சிக்கிய 12 கிலோ ராட்சத கெண்டை மீன்

67பார்த்தது
குட்டையில் சிக்கிய 12 கிலோ ராட்சத கெண்டை மீன்
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த அடசல் கிராமத்தில் உள்ள மலைக்குட்டையில் கோடை காலம் என்பதால் நீர் வற்றி வருகிறது. கோடை விடுமுறையையொட்டி, சிறுவர்கள், இளைஞர்கள் பலர் குட்டையில் குளித்தும், மீன்பிடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் எனும் நபர் விரித்த வலையில் 12 கிலோ எடை கொண்ட ராட்சத கெண்டை மீன் நேற்று சிக்கியது. இதனை அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி