சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த ஆசாமி கைது!

24550பார்த்தது
சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த ஆசாமி கைது!
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகக்கூறி மைனர் சிறுமிகளை நிர்வாணமாக படம்பிடித்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் கொல்லம் காவநாட்டைச் சேர்ந்த முகமது ஹரீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுமிகளிடம் நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். சிறுமிகளை சினிமா ஆடிஷன் என்ற பெயரில் வரவழைத்து அவர்களது உடைகளை மாற்றச் சொல்லி, அதனை தெரியாமல் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சிறுமிகளை வீடியோ பதிவு செய்ததாக முகமது ஹரீஸ் மீது நூரநாடு காவல் நிலையத்திலும், கனகக்குன் காவல் நிலையத்திலும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இவர் மீது கொல்லம் இரவிபுரம் காவல் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு மைனர் சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் வல்லுறவு செய்ததாகவும் வழக்கு உள்ளது.

தொடர்புடைய செய்தி