தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா், முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடிக்கொடை விழா ஆக.5-7 வரை நடைபெறுகிறது. ஆக.5 இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, வில்லிசை, அன்னதானம் நடைபெறுகிறது. ஆக.6 காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன்- சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பகலில் கும்பம் திருவீதியுலா, வில்லிசை, அன்னதானம், ஆக.7 சிறப்பு மகுடம், கும்பம் திருவீதி எழுந்தருளல், மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெறும்.