தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைப்பு!

70பார்த்தது
தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைப்பு!
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மை பணிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை பொருத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டிஏபி 15 ஆயிரம் மெட்ரிக் டன் என்று அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21, 6008 டன் என்ற அளவில் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி