நள்ளிரவில் காதலி வீட்டுக்கு வந்தவர் அடித்துக் கொலை

57பார்த்தது
நள்ளிரவில் காதலி வீட்டுக்கு வந்தவர் அடித்துக் கொலை
நள்ளிரவில் காதலியை சந்திக்க வந்த இளைஞன் காதலியின் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். குஜராத்தின் சூரத்தில் வைர நகைகள் தயாரிக்கும் தொழிலாளியான மெகுல் சோலங்கி (23) காதலியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் திங்கட்கிழமை காலை நடந்துள்ளது. மெகுல் சோலங்கி நள்ளிரவில் தனது காதலியை பார்க்க வந்த விஷயம் பெண்ணின் சகோதரர் சக்தி பரியாவுக்கு தெரியவந்தது. அவர் தனது மாமா மஹிபத், உறவினர் கோஹிலுக்கு தகவல் தெரிவித்த நிலையில், மூவரும் வீட்டுக்குள் புகுந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அந்த இளைஞனை சுமார் இரண்டு மணிநேரம் அறையில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் மெகுலின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி