நடிகர் சித்திக் திடீர் ராஜினாமா

85பார்த்தது
நடிகர் சித்திக் திடீர் ராஜினாமா
இளம் நடிகை ஒருவரின் பாலியல் புகாரைத் தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நடிகர் மோகன்லாலிடம் அளித்துள்ளார். இதே போல் பல நடிகர்கள் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் சிலர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நடிகர் சித்திக், தமிழில் ரங்கூன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி