பாலிவுட் நடிகர் கோவிந்தா இன்று (அக். 1) அதிகாலையில் உரிமம் பெற்ற தனது சொந்த துப்பாக்கியை எடுத்த போது தற்செயலாக தன்னைத் தானே காலில் சுட்டுக் கொண்டார். இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கோவிந்தா உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் உடல் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.