அண்ணாமலை மீது நடவடிக்கை நிச்சயம் (வீடியோ)

64பார்த்தது
சூலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை காரில் அமர்ந்தவாறு இரவு 10 மணிக்கு மேல் மக்களை பார்த்தவாறு கையெடுத்து கும்பிட்டபடி சென்றார். அப்போது காரை நிறுத்திய போலீசார் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என கூறினர். உடனே காரை விட்டு இறங்கிய அண்ணாமலை அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கே கூடிய பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நான் பிரச்சாரம் செய்யவில்லை. முடித்துவிட்டு வீடு செல்கிறேன். காரை நிறுத்தி டீ கூட குடிக்கக்கூடாதா? என கேட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தேர்தல் விதிகளை மீறிய அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி