மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண்

83பார்த்தது
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண்
சென்னை திருமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி, என்ஜினீயரிங் படித்து 20 வயது மாணவிக்கும் அவரது வீட்டின் எதிரே இருக்கும் 26 வயது பெண்ணிற்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிற்கு ரூ.1 லட்சம் வரை கொடுத்து அந்த மாணவி உதவியிருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணுடன் இணைந்து மது அருந்துவதற்கும் மாணவி பழகியுள்ளார். இந்நிலையில் ஒரு நாள் மது அருந்தும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஓரினசேர்க்கைக்கு வரும்படி மாணவியை அப்பெண் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மாணவி, அப்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். தற்போது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து அந்த பெண் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி