பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க விஜய் உத்தரவு

56பார்த்தது
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க விஜய் உத்தரவு
தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து நிர்வாகிகளுக்கும் தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் தனது பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என விஜய் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சென்று விஜய் நலம் விசாரித்தார்.

தொடர்புடைய செய்தி