சமூக வலைதளங்களில் ஆங்காங்கே அதிர்ச்சி மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அப்படி ஒரு இளைஞன் ஒரு தெருவில் மட்டையுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு வந்தான். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை கிரிக்கெட் விளையாடுவது போல் நடித்து திருட முயன்றுள்ளார். ஆனால் கடைசியில் அதை ஸ்டார்ட் செய்யும் போது எதிர்புறம் சிசி கேமரா தென்பட்டது. அவர் திடீரென திடுக்கிட்டார். உடனே அதை விட்டுவிட்டு அங்கிருந்து நைசாக புறப்பட்டார்.