சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது கடந்த மே மாதம் ஏற்பட்ட சூரியப் புயலின் போது விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம் என் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.