பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் 37 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர், மீனாட்சி லேகி போன்ற முக்கியமான 37 நபர்களை அமைச்சரவையில் இருந்து மோடி விலக்கியிருக்கிறார். இவர்களில் 18 பேர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் ஆவர். தேர்தலில் தோற்ற போதிலும் மத்திய அமைச்சரான ஒரே நபர் எல்.முருகன் மட்டுமே. மத்திய அரசில் 81 பேர் வரை அமைச்சராக முடியும் என்பதால், இன்னும் 9 மந்திரிகள் வரை பதவியேற்க முடியும்.