மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த நிலையில், வியாழன் அன்று வட்கான் ஷெரி நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மீது திடீரென மரம் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி உயிர்தப்பினர். விபத்து நடந்தவுடன் வேனில் இருந்து வெளியே ஓடினர். இதில் ஸ்கூட்டரில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.