மழை பெய்வதற்காக பூனைகளை வைத்து வினோத விழா

77பார்த்தது
மழை பெய்வதற்காக பூனைகளை வைத்து வினோத விழா
நம் நாட்டில் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘ஹே நியாங் மாவ்’ என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த ஊர்வலத்தில் கருப்பு பூனைகள் மூங்கில் கூடைகளில் வைக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அணிவகுத்து நிறுத்தப்பட்டு, பாரம்பரிய இசைகளை வாசித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றால் மழை பெய்யும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி