டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து வந்துள்ளார். அதேபோல், சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது மனைவியை அடித்துள்ளார். இதனைப் பார்த்த 16 வயது மகன், ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுவனை கைது செய்தனர்.