ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லுாரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. நேற்று முன் தினம் (ஜூலை 4) 'கேஷியர்' அறையில் இருந்த பணம் எண்ணும் இயந்திரத்தில் இருந்து பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பாம்பை மீட்டனர். மூன்றடி நீளம் கொண்ட பாம்பு கொம்பேறி மூக்கன் என தெரிந்தது. விஷமற்ற இந்த பாம்பு, மரம் ஏறும் தன்மை கொண்டது.