இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்வி! சோர்வடைந்த அதிமுக தொண்டர்கள்

74பார்த்தது
இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்வி! சோர்வடைந்த அதிமுக தொண்டர்கள்
2016-ல் அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து பல சட்டப் போராங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தார். அவரின் தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. 2017 ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தொடங்கி 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 மக்களவை தேர்தல் உட்பட 9 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இதுபோன்ற தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்கள் கடுமையாக சோர்வடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி