பழநி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்களில் இருந்து பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும் வகையில் ஸ்டீல் தடுப்புகளும் பாதயாத்திரை பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.