அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியதையடுத்து திட்டமானது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட வாரியாக மாணவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 15,700 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.