கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், அந்த பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.