போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எடையிலான செயற்கைக்கால்களுடன், நடக்க முடியாமல் நடப்பதை கவனித்த அப்துல் கலாம், வெறும் 400 கிராமில் அதை கண்டுபிடித்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தார். தனது வாழ்க்கையில் எத்தனையோ அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் கண்டுபிடிப்பே தனக்கு பெரும் திருப்தி கொடுத்தது என ஒருமுறை மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.