அமெரிக்காவில் வயிறு வழியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற 70 வயதான வில்லியம் என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை தவறுதலாக அகற்றியுள்ளனர். இதனால் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அறுவை சிகிச்சை நிபுணர் செய்ய வேண்டிய சிகிச்சையை ஒரு பொதுமருத்துவர் செய்ததால், தனது கணவர் உயிரிழந்ததாக அவரின் மனைவி பெவெரெலி வழக்கு தொடர்ந்துள்ளார்.