ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்தவருக்கு ஆயுள் தண்டனை

19311பார்த்தது
ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்தவருக்கு ஆயுள் தண்டனை
உ.பி., படவுன் நகரை சேர்ந்தவர் பன்னா லால் - அனிதா தம்பதிகளுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆன நிலையில் 5 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதனிடையே 2020ம் ஆண்டு 6வது முறையாக அனிதா கர்ப்பமாக இருந்தார். தனக்கு மகன் வேண்டும் என விரும்பிய பன்னா லால், குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்ள, அனிதாவின் வயிற்றை அரிவாளால் கிழித்தார். தாக்குதலில் இருந்து அனிதா உயிர் பிழைத்த நிலையில் நீதிமன்றத்தில் கணவரின் கொடுமை குறித்து புகாரளித்தார். இத்தனை நாட்களாக நடந்து வந்த வழக்கில் தற்போது பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி