பிலிப்பைன்ஸ் நாட்டில் 5.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்

62பார்த்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில்  5.4 ரிக்டர் அளவுக்கு  நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் 5.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டிலுள்ள மெகடாசின் நகரத்துக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி