மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி பலி

89759பார்த்தது
மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி பலி
சிவகங்கை அருகே மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் முத்தம்மாள் என்பவர் தினக்கூலி வேலைக்கு செய்துவருகிறார். மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலைக்கு சென்ற அவர் வீட்டுக்கு வரும்போது அதை எடுத்துவந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அதை பச்சையாக சாப்பிட்ட மூன்று குழந்தைகளில் இருவருக்கு, இரவு ஒரு மணி அளவில் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதில் ஒரு சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி