உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு குடும்பம் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவர்களின் 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், இரவில் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளது.