70,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிப்பு

75பார்த்தது
70,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிப்பு
குடியரசு தினத்தையொட்டி, டெல்லி, நகரம் முழுவதும் 70,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று 75வது குடியரசு தின விழாவையொட்டி, தலைநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பின் பாதுகாப்பிற்காக 14,000 போலீசார் கர்தவ்யா பாதையிலும் அதைச் சுற்றியும் நிறுத்தப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதையில் சுமார் 77,000 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். தேசத்தின் பெண் சக்தி மற்றும் ஜனநாயக விழுமியங்களை முன்னிறுத்தும் பிரமாண்டமான அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

தொடர்புடைய செய்தி