இன்றைய முக்கிய செய்திகளை நீங்கள் கீழே காணலாம்


இனி அதிமுக ஒரே அணி தான் - எடப்பாடி பழனிசாமி
Feb 23, 2023, 06:02 IST/

இனி அதிமுக ஒரே அணி தான் - எடப்பாடி பழனிசாமி

Feb 23, 2023, 06:02 IST
அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் பேசிய அவர், அதிமுக குடும்ப கட்சி கிடையாது; மக்களுக்காக உழைக்கும் கட்சி. டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த உடனேயே சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார். கடந்த ஆண்டு ஜுலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.